பிரார்த்தனை.
சத்திய ஒளி வடிவானவனே!
உன்னுடன் ஒன்றாகிக் இரண்டறக் கலந்து வளர்ச்சி பெறுவது, பரமனாகிய உன்னுடைய ஆன்மாவுடன் எங்களது ஆன்மாவை ஒன்றுபடுத்துவது, உனது மகா உன்னதமான தர்மத்திற்கு அதாவது அன்பிற்கு, பற்றற்ற அமைதியும், சாந்தியும் நிரம்பிய வலிமை மிக்க உண்மையான பணியாளனாவது ஒன்றே இங்கு முக்கியமானதாகும். இது ஒன்றே பெரும் மதிப்பிற்குரிய செயலும் ஆகும்.
என் தலைவனே, பூரணமாக பற்றை அறுத்து இருக்கும் போது கிடைக்கும் அமைதி, உனது உண்மையை மெய்ப்பிக்கும் அமைதி, எந்த கோணல் புத்தியையும் வெற்றி கொண்டு, எப்படிப்பட்ட இருளையும் போக்கவல்ல, அப்பேர்ப்பட்ட பேரமைதி எனக்கு கிடைத்திட அருள் செய்வாயாக.
இறைவா, எனக்கு தரப்பட்ட வேலைக்கு தேவையான ஆற்றலை எனக்கு தந்து அருள்வாயாக. எனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ என்னுள் இருக்கும் எதுவும் உனது தெய்விகப் பணியில் அசட்டையாக இருந்து உனக்கு துரோகம் செய்யாமல் இருக்கும்படி அருள் செய். இதனையே உன்னிடம் பணிவுடன் வேண்டுகிறேன்.
என்றும் உள்ள இறைவனே, அமைதி நிரம்பிய பக்தியுடன் உன்னைப் பணிந்து வழிபாடு செய்கிறேன்.
ஸ்ரீஅன்னை. 20 பிப்ரவரி 1914. தியானமும் பிரார்த்தனையும்.
சிந்தனைப் பொறிகள். ஸ்ரீஅன்னையின் புகைப்படங்கள்.
எனது புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கிறேன். நான் எனது புகைப்படத்தை ஒவ்வொருவருக்குத் தரும் போது ஒவ்வொருவிதமான அம்சத்துடன் வெளிப்படுகிறேன். அப்படங்கள் மூலம் ஒவ்வொரு விநாடியும், வெவ்வேறு நிலைகளிலும், வடிவிலும், அம்சங்களுடன் வெளிப்படுகிறேன் எல்லாப் புகைப்படங்களிலும் ஒரேவிதமான அம்சத்துடன் இருப்பது இல்லை. ஒரு புகைப்படம் ஒர் அன்பருக்கு இரக்கம் என்ற அம்சத்தை வெளிப்படுத்தும். அதுவே மற்றொருவருக்கு அமைதி, பரிவு, பாசம், அன்பு, கருணை முதலான தன்மைகளை வெளிப்படுத்தலாம். இது ஏற்றுக் கொள்ளும் அன்பரின் பண்பு, மனநிலை, எண்ணம், ஏற்புத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றது. பொதுவாக எனது புகைப்படங்களில் இருப்பது என்னவென்றால், எனது (பராசக்தியின்) ஆனந்த உணர்வு நிலைகளில் ஒன்றாகும். அதாவது பிரபஞ்சத்தில் செயல்படும் சக்திகளின் பல்வேறு தோற்றங் களில் ஒன்றே வெளிப்படுகிறது. அதனை அன்பர்கள் ஆராய்ந்து கண்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீஅன்னையின் பதில்கள். இனிய அன்னையே...! பிறந்த நாள் என்பது ஆசிரமத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஏன்? பிறந்த நாளின் உண்மையான பொருள் என்னவென்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்? அக உணர்வில், ஆன்மிக நோக்கில் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒரு மனிதன் அதிகமாக ஏற்கும் தன்மையுடன் இருக்கிறான். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் அவன் புதியதொரு முன்னேற்றம் அடைவதற்கு உதவி செய்ய அது பொன்னான வாய்ப்பாகும். எனக்கு தற்போதுள்ள திறமையை விட மேலும் நன்றாக செயல்படும்படி உடலை மாற்றவோ, கட்டாயப்படுத்தவோ முடியவில்லை. எனது உடலை மாற்றம் செய்வது எப்படி? அவ்வாறு உடலை கட்டாயப்படுத்து வது நல்லதா? உடலை கட்டாயப்படுத்துவது என்பது நல்லதல்ல. இந்த உடலால் முன்னேற முடியும், அதனால் செய்ய முடியாததை செய்ய படிப்படியாக கற்றுக் கொள்ள முடியும். அதன் முன்னேறும் ஆசையானது மனதின் முன்னேற்ற விருப்பத்தை யும் வேகத்தையும் விட மிகவும் மெதுவானது. செயலாற்றும் பொறுப்பை மனதிடமும், பிராணனிடமும் கொடுத்துவிட்டால் அவை உடலை தொல்லைப் படுத்தி அதனுடைய சமநிலையை கெடுத்து விடும். உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும்படி செய்து விடும். ஆகவே நாம் பொறுமையுடன் இருந்து உடலின் செயல்பாட்டைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். உடலானது பிராணனையும், மனதையும் விட அதிக அறிவுடன் நடந்து கொள்ளும் இயல்புடையது. தன்னால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பது அதற்கு நன்றாகத் தெரியும். சில உடல்கள் சோம்பேறித்தனம் கொண்டவை, அவைகளுக்கு சிறிது தூண்டுதல் தேவைபடும் என்பது உண்மைதான். ஆனால் எல்லா விஷயங் களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் நிதானம் தேவை. நாம் இயற்கையின் நடுவில் இருக்கும் போது எவ்வாறு இருக்க வேண்டும்? இயற்கையுடன் தொடர்பு கொண்டு இருத்தல் எந்த விதத்திலாவது நமக்கு உதவியாக இருக்குமா? நாம் சிந்திப்பதன் மூலமாக இயற்கையுடன் தொடர்பு கொள்ள முடியாது, ஏனென்றால் இயற்கைக்கு சிந்திக்கத் தெரியாது. ஆனால் ஒரு மனிதனால் இயற்கை அழகை ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்றால் அது அவனது உணர்வு விரிவடைய உதவி செய்யும். பொதுவாக ஒருவன் இயற்கை அழகில் ஆழ்ந்து ஒன்றி அதனுடன் ஒன்று பட்டவனாக இருக்கிறான் என்றால் அவனது ஆன்மாவானது தற்கால நாகரிகத் தால் கெட்டுப் போகாமல் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்பது நிச்சயமாகும். அமைதியான மனதின் மெளனத்தில்தான் இயற்கை யுடன் ஆழ்ந்த உறவு கொள்ள முடியும். பொறாமையையும், சோம்பலையும் விட்டு ஒழிப்பது அல்லது மாற்றுவது எப்படி? பொறாமைக்குக் காரனம் சுயநலம், சோம்பலுக்குக் காரணம் பலவீனம் ஆகும். இந்த இரண்டையும் மாற்றுவதற்கு நல்ல பயன் தரும் மருந்து சுய உணர்வுடன் இறைவனிடம் ஒன்றுபடுதல் ஆகும். ஒருவன் இறைவனுடன் உண்மையாக ஒன்றுபட்டு விட்டால் அவன் மெய்யாக வே அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறான். இதுவும் அன்பு செய்வதால் உண்டாகும் இன்பத்திற்காகவே செய்யப்படும் அன்பாக இருக்கும். பதிலுக்கு அன்பு செய்யப்பட வேண்டும் என்ற தேவை இந்த அன்பிற்கு இருக்காது. அத்துடன் வற்றாத ஆதிமூலத்தினிடம் இருந்து சக்தியை இழுத்துக் கொள்ள கற்றுக் கொள்கிறான். மேலும் இந்த சக்தியை இறைவனது தொண்டிற்காக செலவிடும்போது தான் செலவழித்த சக்தியை மட்டுமின்றி அதற்கு அதிகமாக இறைவனிடம் இருந்து பெறுவதை அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்கிறான். பிரச்சனை என்று ஒன்று இருக்கும் போது அதனை நமது மனத்தைக் கொண்டு (அவ்விஷயங்களைப்) புரிந்து கொள்ள நாம் செய்யும் பகீரதப் பிரயத்தனங்கள், நாம்படும் அவஸ்தைகள் இவற்றின் பலனாகக் கிடைப்பது தலைவலியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; அந்த முயற்சியினால் ஒரு துளி பயனும் கிடையாது, கிடையவே கிடையாது. அதனால் குழப்பம்தான் அதிகப்படும். இரவில் முன்கூட்டியே உறங்கப் போய்விட்டு காலையில் விரைவாகவே எழுவது நல்லது என்று சொல்வதற்கு என்ன காரணம்? சூரியன் மறையும் போது ஒருவகையான அமைதி இப்பூமியின் மேல் இறங்க கிறது. இந்த அமைதியானது உறங்குவதற்கு பேருதவியாக இருக்கிறது. சூரியன் உதிக்கும் போது விறுவிறுப்பான சக்தி இப்பூமியின் மேல் இறங்கு கிறது. இந்த ஆற்றலானது மனிதன் வேலை செய்ய உதவியாக இருக்கின் றது. இரவில் தாமதமாக உறங்கச் சென்று பகலில் தாமதமாக எழுவது என்பது இயற்கை சக்திகளுக்கு மாறுபட்டு நீ செயல்படுவது ஆகும். அது அவ்வளவு அறிவுடைமை ஆகாது, நன்மையும் பயக்காது. சோதிடம் மற்றும் பிற ஆராய்ச்சிகள் எல்லாம் பின்னர் நிகழப் போவதை மிகச் சரியாக கூறுகின்றதா? அல்லது மனிதனால் அதைச் சரியாக சொல்ல முடியாதா? பொதுவாக இதில் ஈடுபடும் மனிதர்களுடைய செயல்களுக்கு பின்னால் சிறிது திறமை இன்மை இருக்கவே செய்யும். ஒருவன் இறைவனை உணர்ந்து அவனுடைய உண்மையான கருவியாக ஆகி இருக்க வேண்டும். அவன் மிகக் கவனமாக இருந்து தானாக எதையும் சொந்தமாக சேர்க்காமல் இறைவனது கட்டளைப்படி மட்டுமே செயல்பட்டால் அப்போது அவனால் மட்டுமே தவறின்றி செயல்பட முடியும். ஆனால் அவ்வளவு எளிதான செயல் அன்று. சிறிதளவேனும் அகங்காரம் இல்லாமல் இருப்பவனால்தான் அதனைச் சரியாக சொல்ல முடியும். புத்தி, அறிவு என்பது என்ன? அவைகளுக்கு நம் வாழ்வில் முக்கிய பங்கு இருக்கிறதா? புத்தி, அறிவு இவை இரண்டும் மனிதனின் உயர்ந்த மன இயல்புகள் ஆகும். இவையே அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. புத்தியும், அறிவும் இல்லாவிட்டால் ஒருவன் மனிதனே அல்ல, அவன் மனித உருவில் வாழும் விலங்கே ஆகும். எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் புதிய மனித இனத்தில் நம் உடலின் வடிவம் மாறுமா? எதிர்காலத்தில் வரும் அதிமன ஜீவனுடைய உடலுக்கும், மனிதனுடைய உடலுக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கும். அது எந்த அளவுக்கு இருக்கும் என்றால், மிக அதிக வளர்ச்சி அடைந்த மனிதக் குரங்கின் உடலுக்கும், மனிதனுடைய உடலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் அளவு இருக்கும். ஆனால் புதிய இனமானது இப் பூமியில் தோன்றுவதற்கு முன் அது என்ன வேறுபாடாக இருக்கும் என்று சொல்வது கடினம். வைகறை - நவம்பர் 2011 - 4.
|