|
| ||||||||||
|
Obedience - to learn to obey good., Obedience - to obey The Divine is better. - The Mother. தகவல் பலகை. வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும். ஜனவரி 16. 2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் என்பவர் 2006ல் லைபீரியாவின் முதல் பெண் அதிபரானார். டயான் பொஃசி, (Diane Fossey) ஜனவரி 16, 1932ம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க பெண்மணி யான இவர் கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்தி உள்ளார். நீண்டகாலம் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா என்னும் நாட்டில் கொரில்லாக்களுடன் வாழ்ந்து அவற்றைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து, முறைப்படி குறிப்புகளை தொகுத்துள்ளார். ஜனவரி 17. ஐ.நா பாதுகாப்பு அவை 1946ல் தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது. ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண் டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக 1998ம் ஆண்டு போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
என். சொக்கன் ஜனவரி 17, 1977ல் பிறந்தார். இப்பெயரில் பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழு த்தாளர் ஆவார். தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதி உள்ளார். ஜனவரி 18. எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாகக் 1896ல் அறிமுகமானது. யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை 1911ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிரு ந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும். 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் 1995ம் வருடம் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜனவரி 20. முதல் முறையாக 1906ம் ஆண்டு யாழ்ப்பாணத் திற்கு வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) வந்தது. வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona 1929ல் திரையிடப்பட்டது. கொலை முயற்சி ஒன்றிலிருந்து 1947ம் வருடம் மகாத்மா காந்தி உயிர் தப்பினார். ஜனவரி 21. உலகின் முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், 1954ல் ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மெர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு 1960ம் ஆண்டு விண்வெளிக்குப் பயணமானது. அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடிமகன் 2008ம் வருடம் காலமானார். ஜனவரி 22. உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) 1952ல் சேவையைத் தொடங்கியது. ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி 1984ல் அறிமுகமானது. இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர். பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, சொற்பொழிவாளராக, பேராசிரி யராக மிளிர்ந்த தமிழறிஞர். தி. வே. கோபாலையர் ஜனவரி 22, 1926ல் பிறந்தார். இவர் தமிழ்நூற்கடல் என அனைவராலும் போ ற்றப்பட்டார். தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநூல்களில் நல்ல புலமையுடையவர். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஜனவரி 23. உலக வரலாற்றில் மிக அதிகமான மக்கள் கொல்லப் பட்ட பூகம்பம் சீனாவின் சாங்சி மாநிலத்தில் 1556ல் ஏற்பட்டது. இதில் சுமார் 830,000 பேர் இறந்தனர். சென்னை மாநிலத்தில் 1957ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 24. தெற்காசியாவின் முதலாவது, முழுமையான பல்கலைக் கழகமான, கல்கத்தா பல்கலைக்கழகம் 1857ம் ஆண்டு திறக்கப்பட்டது சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் 1897ல் யாழ்ப்பாணம் வந்தபோது யாழ் இந்துக் கல்லூரியில் பிரமா ண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பேடன் பவல் சாரணீய இயக்கத்தை 1908ல் ஆரம்பித்தார்.
ஜனவரி 25. தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை 1881ல் ஆரம்பித்தனர். ஆப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) 2004ம் ஆண்டு செவ்வாயில் தரையிறங்கியது. சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால்வழியின் மையத்திற்கு அருகில், பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் 2006ல் கண்டுபிடிக்கப்பட்டது. பி. ஆர். ராஜமய்யர் ஜனவரி 25, 1872ல் பிறந்தார். இவர் ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர் ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளரும் ஆவார். இவர் தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 21ம் வயதில் எழுதினார். ஜனவரி 26. கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் 1565ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசுக்கும், இஸ்லாமிய சுல்தான்களுக்கும் இடையில் நடைபெற்ற போரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இதுவே இந்தியாவின் பெரும் பகுதி இஸ் லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணமாய் அமைந்தது. ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டி யைக் 1926ல் அறிமுகப் படுத்தினார். இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) 1930ம் வருடம் அறிவித்தது. இந்தியா 1950ம் ஆண்டு குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார். இந்தி 1965ல் இந்தியா வின் அதிகாரபூர்வ மொழியானது. இன்று உலக சுங்கத்துறை தினம் அனுசரிக்கப்படுகின்றது. ஜனவரி 27. தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) 1888ல் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது. ஜோன் லோகி பயார்ட் 1926ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதி கள் 7,600 பேர் 1945ம் வருடம் சோவியத் செம்படையினரால் விடு விக்கப்பட்டனர். ஜனவரி 28. சென்னை கோட்டைப் பகுதியில் 1679ல் சிறு நிலநடு க்கம் உணரப்பட்டது. சென்னையில் முதன்முதலாக 1882ல் தொலை பேசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஐஸ்லாந்து 1935ம் ஆண்டு கருக் கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
முதல் ஆறாண்டுகளை ராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் அடைமொழிப் பெயர் பூண்ட 'புன்னகை புத்தர்' [Code Name, Smiling Buddha] என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது! 1974 மே மாதம் 18 ஆம் தேதி ராஜஸ்தான் பொக்ரான் பாலைவனத்தில் அடித்தள அணுவெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. இன்று உலக தொழுநோய் நாள் அனுசரிக்கப்படுகின்றடு. இந்தியாவில் இன்று தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது..
ஜனவரி 30. உலகின் முதலாவது radiosonde 1930ல் சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் 1948ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய அரசியல்வாதியும், உணவுப் புரட்சி க்கு வித்திட்டவருமான சி. சுப்பிரமணியம், 1910ல் பிறந்தார். இன்று இந்தியாவில் தியாகிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலக தொழுநோய் ஒழிப்பு நாள் இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. ஜனவரி 31. பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் 1747ம் ஆண்டு நிறுவப்பட்டது. நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் 1961 ல் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது. பிப்ரவரி 1. ஐசாக் பிரிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ் ட்ரீட் ஆகியோர் 1788ல் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர். ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) 1832ல் கண்டியில் ஆரம்பமாகியது. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு 1884ல் வெளியானது. உலகின் மிகப் பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் 1913ம் ஆண்டு திறக்கப்பட்டது. கொலம்பியா விண்ஓடம் 2003ம் வருடம் பூமியின் வளிமண்டலத்தி னுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 2. வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பாளையக்காரராக 1790ல் பொறுப்பு ஏற்றார். முதலாவது மின்சார வீதி விளக்குகள் 1880ம் ஆண்டு இந்தியானாவில் நிறுவப்பட்டன. செய்மதித் தொலைக் காட்சி மூலம் 1989ல் ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. பா. வே. மாணிக்க நாயக்கர் பிப்ரவரி 2, 1871ல் பாகல்பட்டி, சேலம், தமிழ்நாடு பிறந்தார். இவர் அறிவியல் தமிழ் வளர்த்த அறி ஞர் ஆவார். சென்னையில் பொறியல் கல்வி கற்ற இவர் தமிழ் வேர் சொற்களில் இருந்து பல அறிவியற் சொற்களை ஆக்கி பயன்படுத்திய வர். இன்று உலக சதுப்பு நில நாள் அனுசரிக்கப்படுகிறது. பிப்ரவரி 3. சோவியத் விண்கலம் லூனா 9, 1966ம் ஆண்டு சந்தி ரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் 1984ல் முதன் முதலாக விண்வெளியில் சுதந்திரமாக நடந்து சாதனை படைத் தார்கள். பிப்ரவரி 4. கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று 1859ம் ஆண்டு எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது. முதல்முறை யாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் 1936ல் உரு வாக்கப்பட்டது. ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து 2007ம் ஆண்டு வெற்றிகரமாக ஏவப்பட்டது. வங்காள தேசத்தில் 2007ல் நடைபெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் கோட்டயத்தில் உள்ள உழவூர்(கேரளா), பிப்ரவரி 4, 1921ல் பிறந்தார். பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவரும் இப் பொறுப்பை வகித்த ஒரே தலித்தும் மலையாளியும் ஆவார். பிப்ரவரி 5. ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் முதலாவது இதழ் 1922ல் வெளி யிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஜார்ஜியாவில் சவான்னா கரை களில் 1958ம் வருடம் அமெரிக்க வான் படையிடமிருந்த காணாமல் போன ஐதரசன் குண்டு ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில் லை. அப்பல்லோ 14 விண்கலம் 1971ல் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது. பிப்ரவரி 6. ஸ்டாம்போர்ட் ராபில்ஸ் என்பவரால் 1819ம் ஆண்டு சிங்கப்பூர் அமைக்கப்பட்டது. டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவ னத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி 1959ல் integrated circuitக்கான காப்பு ரிமத்தைப் பெற்றார்.
பிப்ரவரி 7. சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice 1914ல் வெளியானது. சுவிட்சர்லாந்தில் 1971ம் ஆண்டு முதல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களு டன் 1977ல் விண்ணுக்கு ஏவியது. உலகத் தமிழிணைய மாநாடு 1999ல் சென்னையில் ஆரம்பமானது.
பிப்ரவரி 8. ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் 1942ம்ஆண்டு நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார். நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு 1971ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 84 நாட்கள் விண்ணில் சுற்றிய பின் 1974ல் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூடமான ஸ்கைலாப் 4 வீரர்களுடன் பூமிக்குத் திரும்பியது. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான சாகீர் உசேன் பிறந்தார். இவர் 1967இல் இருந்து 1969 இல் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். பிப்ரவரி 9. வில்லியம் மோர்கன் என்பவர் 1895ல் volleyballக் கண்டு பிடித்தார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் 1990ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. போயிங் 747 விமானத்தின் முதற் சோத னை ஓட்டம் 1969ல் நடந்தது. ஹேலியின் வால்மீன் 1986ல் சூரியனு க்கு அண்மையில் அதாவது எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது. பிப்ரவரி 10. அலன்சன் கிரென் 1863ல் தீயணைக்கும் கருவி யின் காப்புரிமம் பெற்றார். கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமை ப்பு (YWCA) 1870ல் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது புது டில்லி 1931ம் ஆண்டு இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது. சதுரங்கக்கணிணி "டீப்புளூ" 1996ல் உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது. பிப்ரவரி 11. ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவ மனை 1752ல் பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது. மகாத்மாகாந்தி 1933ல் ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் 1971ம் ஆண்டு சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடை யைக் கொண்டுவர முடிவெடுத்தன.
இன்று டார்வின் நாள் (Darwin Day) ஆகும். இது ஒவ்வோர் ஆண் டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் 1809ம் ஆண்டு பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளி த்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூறுகிறார்கள்.
இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி | |||||||||||