அருளே வடிவமான ஸ்ரீஅன்னை, தியாகத்தின் திருஉருவான பகவான் ஸ்ரீஅரவிந்தர்
ஆகியோரின் பாதமலர்க் கமலங்களில் பணிந்து வணங்குகிறோம். இறைவனின்
திரு அவதாரங்களான பகவான் மற்றும் ஆதிசக்தியின் வடிவமான தெய்வங்களைப் எந்நாளும் போற்றிப்
பணிகின்றோம்.
கடந்த இருபது
வருடங்களாக பகவான் மற்றும் ஸ்ரீஅன்னை யின் ஆன்மிக வழிகாட்டுதல்களாலும்,
கருணைமிக்க பேருதவி யாலும் இன்றுவரை அவர்களது பாதுகாப்பில்
நலமுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வில் பல்விதமான இடர்பாடுகள்,
துன்பங்கள், நோய்கள் முதலானவை ஏற்பட்ட போதும் அனைத்து சூழ்நிலைகளிலும் எங்களை
மீட்டு பாதுகாத்து, அரவணைத்து
வழிநடத்திச் செல்லும் இறை அவதாரங்களை நாங்கள் அறியப் பெற்றதும், அவர்களது
அரவணைப்பில் வாழ்ந்து வருவதும் நாங்கள் செய்த நற்தவமே என்பதைவிட,
பரம்பொருளின் கருணையும், பேரருளும் மிக்க பார்வை எங்கள் மீது பதிந்ததே ஆகும்.
பகவான் மற்றும் ஸ்ரீஅன்னனயின் ஆற்றலையும்,
அருளையும் பெற்று நாங்கள் வளர்ந்தும், வாழ்ந்தும் வருவது போல அனைவரும் பயன் பெறும் விதமாக
'பணிவு அல்லது கீழ்படிதல்' எனும்
பொருளில் 'obedience.in' என்ற இந்த
தமிழ் இணைய தளம் பகவானின்
அவதாரத் திருநாளான 15 ஆகஸ்ட் 2006ம் ஆண்டு முதல்
செயலாற்றி வருகின்றது.
எல்லா
உயிர்களும் ஆயுள் முழுமையும் சாந்தி, முன்னேற்றம், புகழ், செல்வம், ஆரோக்கியம் முதலான
அனைத்து நல்வளங் களையும்
பெற்று என்றும் இனிமையான
ஆனந்தமயமான தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும் என
கருணையுடன்
பரம்பொருளான
பகவான் ஸ்ரீ அரவிந்தரும்-பராசக்தியான ஸ்ரீஅன்னையும்
ஆசிர்வதித்து நல்வழி காட்டி அருள் புரிந்து வருகின்றனர்.
பரம்பொருளான
ஸ்ரீஅன்னை மற்றும் ஸ்ரீஅரவிந்தரின் ஆன்மிக மேன்மைகளையும், உயிர்கள்
அனைத்தும் தெய்வீக வாழ்வு பெறுவதற்காக இருவரும் ஆற்றிய பணிகளையும்,
மனிதர்களின் உயர்விற்காக
அருளியுள்ள மேன்மை மிகும் பலன்களைத் தரும் ஆன்மிக
வழிகாட்டுதல்களையும் அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்.
மேலும் மனிதர்கள் தமது வாழ்வில் உயர்வு பெறும்
வண்ணம் அவர்கள்
அருளிய தத்துவங்களையும், கருத்துரைகளையும் இங்கு வெளியிட்டு வருகின்றோம். ஒவ்வொருவரும் இதனை அறிந்து,
உணர்ந்து இறையருள் பெற்று வாழ்வில் உயர்வையும், இன்பத்தையும் பெற
வேண்டும் என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
ஆகவே இதனை ஒவ்வொரு மாதமும்
15ம் நாள் பயன் தரும் புதிய விவரங்களுடன் புதுப்பித்து வருகின்றோம்.
இவற்றைப் படித்து வரும் அன்பர்கள் இறை அவதாரமான
பகவான் ஸ்ரீஅரவிந்தர்-பராசக்தியான ஸ்ரீஅன்னையின் வழிகாட்டுதல்களை ஏற்று செயல்பட்டால் அவர்களுக்கு
வாழ்வில்
நிச்சயம் மேலான உயர்வையும் முன்னேற்றத்தையும்
இறைஅருளானது கொடுக்கும் என்பது உறுதி.
''வாழ்வனைத்தும் யோகம்'' என்பது பகவான் ஸ்ரீஅரவிந்தர் வாழ்ந்து
காட்டிய ஆன்மிக யோக நெறியாகும். இவ்வுலகும் அதில் நமது வாழ்வும் பொய்யானதும், பொருளற்றதும்
அல்ல.
இறைவனின் திட்டப்படி அமையப் பெற்ற இவை அனைத்தும் ஆன்மாக்கள் ஒர் உயர்ந்த முன்னேற்றத்தையும்,
தெய்வீக வாழ் வையும்
பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆகவே நாம் நமது வாழ்வின் இலட்சியத்தையும்,
படைப்பின் உண்மையையும் உணர்ந்து அந்த உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்ல முயற்சி
செய்ய வேண்டும்.
இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைய மனித வாழ்வில் நாம் அடைகின்ற ஒவ்வோர் அனுபவமும்,
தினசரி ஏற்படும் நிகழ்வு களும் உதவும். இந்த உண்மையை நமக்கு உணர்த்தவே மனித உடலில் பகவான்
ஸ்ரீஅரவிந்தர் அவதரித்தார்.
நம்மைப் போல வாழ்வை உள்ளது உள்ளபடி
அனுபவித்து, பின்னர் அதனை ஆன்மிக வாழ்வாக உயர்த்தி, 'பூரண யோகம்' செய்து இவ்வுண்மையை
ஆதாரப்பூர்வமாக நிலை நிறுத்தினார். மிகச் சுருக்கமாகச் சொன்னால்
'மனிதனும்
தெய்வமாகலாம்' என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்.
ஆகவே நமது
வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு சிறு சம்பவ ங்களும், நமது செயல்பாடுகள் அனைத்தும்
இறைவனால் நமது முன்னேற்றத்திற்காக நடத்தப்படுகிறது எனும் சூட்சும உண்மை யை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வெறும் கருவிகள் மட்டுமே என்ற மெய் உணர்வு
பெற்று விட்டால் இன்பம்-துன்பம் எல்லாம் அவனருளால் விளைபவை என்ற உண்மை
புரிந்து விடும்.
நமது
அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டாத விஷயங்களை புரிந்து கொள்ளவும், தீர்க்க
முடியாத சிக்கல்களை, நமக்கு எதிரான சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றி வெற்றி பெறச் செய்யவும்
எப்பொழுதும் ஸ்ரீஅன்னை-பகவானின் பேரருளும், வழிகாட்டுதலும் உதவி செய்யும்.
அருளானது நம் வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் சரியான பாதையில் செல்வதற்கான தெளிவைத் தந்து
நல்வழி காட்டி நம்மை அழைத்துச் செல்லும். இதன் மூலம் குழப்பமும், துன்பமும்
இன்றி நமது வாழ்க்கையை அமைதியாகவும், மகிழ் ச்சியுடனும் நடத்திச் செல்ல முடியும்
''எல்லோரும் இன்புற்று, தெய்வீக வாழ்வு பெற்று சாந்தி, ஆனந்தத்துடனும்
இருக்க வேண்டும்'' என்பதே நம்மை வழி நடத்தும் இறை அவதாரங்களின் இலட்சியம்
ஆகும். ஆகவே தான் இவ்வுலகின் மேன்மைக்காக அரும்பாடுபட்டு அவர்கள் பூரண யோகத்தை வெற்றிகரமாக
செய்து முடித்தனர்.
இதன் அடிப்படையில் நாம் அனைவரும் இறைவனின் குழந் தைகள் என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையுடன் வாழ்ந்து, சத்தியத்தின் ஒளியில் நடந்து சென்று, நாம் தெய்வீக வாழ்வு பெற்று இறை நிலையை அடைய வேண்டும்.
மனிதர்கள்
உலக வாழ்வில் வெற்றி பெற்றால்தான் ஆன்மிக வாழ்வு நோக்கித் திரும்புவார்கள் என்பதை இறைவன் நன்றாக அறிவார். ஆகையால் நமது வாழ்வில் மனிதர்களுக்கு
ஏற்படும் எல்லா குழப்பங்களையும், தடைகளையும் ஸ்ரீஅன்னை-பகவான்
ஸ்ரீஅரவிந்தரின் அருளும், வழிகாட்டுதலும் முழுமையாக தீர்த்து வைத்து, நாம் நலமுடன் வாழ வழி
காட்டி உயர்வு அடையச் செய்கிறது.
எங்களது இச் சிறிய முயற்சி ஸ்ரீஅன்னை-பகவான் ஸ்ரீஅரவிந் தரின் அருளால்
இன்றுவரை எல்லா சூழ்நிலைகளிலும் தடை இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பரம்பொருளின் அருளும், வழிகாட்டுதலும் இருக்கும் வரை
ஆன்மிகப் பணிகள் தொடரும்.
ஸ்ரீஅன்னை-பகவான் ஸ்ரீஅரவிந்தர் ஆகியோர் பற்றிய தங்கள் கருத்துக்களையும்,
அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டு எல்லோரும் இன்புற்று வாழ வழிகாட்டுங்கள். அன்பர்கள் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தவறாமல் மின்னஞ்சல்
வழி தெரிவிக்க வேண்டுகிறோம்.