|
வந்தே மாதரம். மலர் - 6. 15 மே 2012. இதழ் - 9.
படிக்க-சிந்திக்க. மனிதர்கள் மரணமில்லா தெய்விக வாழ்வைப் பெற்று என்றும் இன்புற்று வாழ வேண்டும் என்ற அளப்பரிய கருணையுடன் பகவான் ஸ்ரீஅரவிந்தர் பூரணயோகம் செய்தார். அவரது இலட்சியம் முழுமை அடையவும், உறுதுணையாக இருந்து செயல்புரியவும் பராசக்தியான ஸ்ரீஅன்னை பாண்டிச்சேரிக்கு நிரந்தரமாக வந்து தங்கி சேவை புரிந்தார். ''மனிதனும் தெய்வம் ஆக வேண்டும், மரணமில்லா பெரு வாழ்வு வாழ வேண்டும்'', என்பது பரம்பொருளின் விருப் பம். தெய்விக உலகில் ஆனந்தமயமான முறையில் நோய்- நொடி இன்றி, துன்பம்-துயர் எதுவும் இன்றி, பேரின்பம் நிறைந்த வாழ்க்கையை எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்ற அன்பின், கருணையின் காரணமாக பூரணயோகம் செய்ய இறைவன் தீர்மாணித்தார். இதற்காக பகவான் இவ்வுலகில் வந்து அவதாரம் செய்த திருநாள் ஆகஸ்ட் 15ம் தேதி ஆகும்.
இயற்கையின் வளர்ச்சியானது ஒரு ஏணிப்படி போல மேலே மேலே என உயர்ந்து வந்துள்ளது. இதற்கு அடுத்து இன்னும் உயர்ந்த படைப்பை உருவாக்குவதில் இயற்கை அன்னை ஈடு பட்டு இருக்கிறாள். அப்படைப்பு மனிதனைவிட மேம்பட்டதாக வும், ஆனால் தோற்றத்தில் அது மனிதர்களைப் போலவே இருக்கும். ஆயினும், மனிதர்களின் அகங்காரம், மனம் ஆகிய வற்றில் இருந்து மிகவும் மேன்மை பெற்றதாக அப்படைப்பு இருக்கும்.
இந்த தெய்வீக உண்மையை மக்களுக்கு எடுத்து உரைத்து, உணர்த்தி, நம்மை உயர்ந்த படைப்பாக மாற்றுவதற்கு பகவான் ஸ்ரீஅரவிந்தர் இறை உலகில் இருந்து இறங்கி இப்பூமிக்கு வந்தார். மனிதன் என்பவன் மன உணர்வில் வாழும் ஒர் இடைப்பட்ட பிறவிதான் என்று அவர் கூறினார்.
சத்திய ஒளியை - அதாவது உண்மை உணர்வை அடையும் சாத்தியக் கூறும்- ஒரு முழுமையான, இசைவுள்ள, நல்ல, அழகான, மகிழ்ச்சிகரமான, முழு உணர்வுள்ள ஒரு வாழ்க் கையை வாழும் தகுதியும் மனிதனுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தினார்.
இவ்வுலகில் இதுவரை நடந்துள்ள ஆன்மிக முன்னேற்ற வரலாற்றில் பகவான் ஸ்ரீஅரவிந்தர் சொல்லி இருப்பது ஒரு அறிவுரையோ, ஒரு புதிய தத்துவ விளக்கமும் அல்ல; அது பரம்பொருளிடம் இருந்து நேரிடையாக வந்த மிக உயர்ந்த,ஓர் அழுத்தமான உண்மையான செயல்பாடு ஆகும்.
சத்திய ஒளியை இப்பூமிக்கு கொண்டு வந்தால் அனைத்தும் திரு உரு மாற்றம் பெற முடியும். அப்போதுதான் எல்லோரும் தெய்விக நிலையை அடைந்து புதுப் பிறவி பெறுவார்கள். எனவே சத்திய ஒளியை மேல் உலகில் இருந்து இங்கு கொண்டு வருவதற்காக பகவான் பூரண யோகம் செய்தார்.
இந்த யோகத்தை செம்மையாக நடத்தி முடிக்கவும், இறைவ னுக்கு உறுதுணையாக இருந்து செயல்படவும் ஆதிசக்தியான ஸ்ரீஅன்னை 1878ம் வருடம் பிப்ரவரி மாதம் 21ம் நாள் வியாழக்கிழமை காலை 10.15 மணியளவில் அவதரித்தார்.
பகவானுடன் இனைந்து பூரண யோகம் செய்து இறைவனது உலகில் இருந்து சத்திய ஜீவிய சக்தியை இப்பூமிக்கு கொண்டு வந்தார். தமது உடலில் இருக்கும் ஒவ்வொரு அணுவையும் திருஉருமாற்றம் செய்து தம் இறுதி மூச்சு உள்ளவரை ஸ்ரீஅன்னை பூரண யோக சாதனை புரிந்தார்.
''பகவான் - ஸ்ரீஅன்னையிடம் பிரார்த்தனை செய்தால் சரியான வழிகாட்டுதலும், தேவையான உதவிகள் என அவசியமான அனைத்தும் நமக்கு கிடைக்கும்'' என்பது அனுபவ உண்மை. இதன் முழுமையான பொருளை உணர்ந்து கொள்ள நாம் சற்று நேர்மையுடன் வாழ முயற்சி செய்தால் போதும். மனிதனுக்குத் தேவையான அனைத்தும் வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கும் என்பது நிச்சயம்.
''மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் நான் தருகிறேன், அவர்கள் தங்களது உண்மை நிலையை உணர்ந்து இறைவனை அறியும் நோக்கத்துடன் வழிபாடு செய்து வந்தால் மேலும் அதிக நன்மை அடையலாம்'' என்று ஸ்ரீஅன்னை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்.
இதில் ஓர் உண்மை மறைந்து இருக்கிறது. நம்மைப் படைத்த இறைவன் நமது வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நமக்கு சரியான விதத்தில், சரியான வேளையில் தந்து உதவு கின்றான். இது என்றும் மாற்றம் இல்லாத சூட்சுமமான விதியாக இருக்கிறது
''ஒவ்வொரு நொடியும் நமக்கு எது மிகவும் நன்மை தருமோ அவற்றையே இறைவன் வழங்கி வருகிறான், ஆனால் நாம்தான் அறியாமையில் இருந்து கொண்டு இறைவனது கருணையை உணராமல் குறைபட்டுக் கொண் டிருக்கிறோம்'' என ஸ்ரீஅன்னை வருத்தத்துடன் தெரிவிக் கின்றார்.
நமது வாழ்வில் நடப்பவை எல்லாம் நம் விருப்பப்படியே நடப்பது இல்லை. இப்படி நம் கட்டுப்பாடு இன்றி காரியங்கள் நடைபெறும் விசித்திரமான ஒரு அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இறை வழிபாடு செய்யும் அனைவரும் கடவுளை தேவைப் படும் காலத்தில் மட்டும் வழிபடாமல் எப்பொழுதும் முழுமை யான மனதுடன் அவனை சரணடைந்து வாழ வேண்டும். இது ஒன்றே நமது வாழ்க்கையை எவ்விதமான சிரமமும், பிரச்ச னையும் இன்றி சுலபமாக நடத்திச் செல்லக் கூடிய எளிய வழி முறை ஆகும்.
இத்தகைய வாழ்க்கை முறைக்கு நாம் மாறும் போது கடவுள் அதிக பொறுப்புடன் நம் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்து வழி நடத்திச் செல்கிறான். ஆகவே நாம் நிலையான, நிஜ மான, உயர்ந்த, அமைதியுடன் கூடிய வாழ்க்கையை பெற விரும்பினால் நேர்மையுடன் இறைவனது பாதத்தில் சரணடை ந்து விடுதல் வேண்டும். நம்மைப் படைத்தவனுக்கு நமது தேவை என்னவென்று தெரியும். இந்தப் புரிதலும், நம்பிக்கை யும் நம்முள் வந்து விட்டால் நமது அவசியமான, நியாயமான, விருப்பங்கள் அனைத்தும் இறைவனால் நிச்சயம் நிறைவேறும்.
'வாழ்வனைத்தும் யோகம்' என்பது ஸ்ரீஅரவிந்த அன்னை காட்டும் எளிய வாழ்க்கை நெறி ஆகும். வாழ்வை சுமையாக இல்லாமல், இனிமை உள்ளதாக மாற்றும் அற்புத சக்தி இவ் வழி முறையைக் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கும். இது உல கத்தில் உள்ள அனைவரும் பயன் பெறக் கூடிய ஒரு பொது வான நெறி முறை ஆகும்.
ஸ்ரீஅன்னை-பகவானை சரண் புகுந்தவர்கள் அவரிடம் நெரு ங்கி வந்து அருளைப் பெற்று வாழ்வில் உயர்வு அடைகின்ற னர். இவ்வுண்மையை அறிந்தவர்களும், அறியாதவர்களும், ஆன்மாவில் தூய்மையும், சொல்லில் நேர்மையும் உள்ள எவ ரும் சமய, இனப் பாகுபாடின்றி ஸ்ரீஅன்னையின் வழிகாட்டுதல் களையும், உதவியையும், அருளையும் பெற்று உயர்வு பெற முடியும்.
''பொய்மை ஸ்ரீஅன்னை-பகவானுக்கு ஒவ்வாத எதிரான பண்பாகும். அதனை இருள் என்று ஸ்ரீஅன்னை குறிப்பிடு கின்றார். பொய்மையை வெல்லும் மனிதர்களே சத்திய ஜீவிய வாழ்வு அதாவது தெய்வீகம் நிறைந்த ஆனந்த வாழ்வு பெற முடியும்'' என வலியுறுத்துகின்றார்.
பொய்மையும், ஏமாற்றுத்தனமும் நிரம்பிய இவ்வுலகில் நாம் தெளிவான மனதுடன், தூய்மையுடன் வாழ்வது சற்று கடினம் தான். இருப்பினும் அத்தகைய மனிதருக்கே அழிவற்ற தெய் வீக வாழ்வு காத்து இருக்கின்றது என்பது பலரும் அறியாத உண்மையாகும்.
ஆகவே, நாம் இன்று முதல் உண்மையின் நிழலில் இருந்து, நேர்மை வழி நடந்து, உலக வாழ்வை இறைவன் அருளால் வெற்றிகரமாகவும், ஆனந்தமாகவும் கழிப்போம். இதன் மூலம் நாம் உயர்ந்து பிறரையும் உயர்வடையச் செய்வோம்.
உண்மையான ஆர்வத்துடன் முயன்றால் நம் வெற்றி நிச்சயம், மேலும் பகவான்-ஸ்ரீஅன்னையின் அருளும், ஆசியும் நமக்கு உறுதுணையாய் இருக்கும். வாருங்கள், நல்லதொரு உலகம் படைப்போம், நலமுடன் வாழ்வோம். நன்றி! வாழ்வனைத்தும் யோகம்.
|